தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிற்காக வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி.
13 மாவட்டங்களில் எமது கட்சிக்கு வெற்றி கிட்டியுள்ளது.
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பீடு செய்யும் போது கொழும்பு, கண்டி மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளோம்.
2005ம் ஆண்டு 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலைப் போன்றே இம்முறை தேர்தலிலும் ஆறு மாவட்டங்களில் எதிர்க்கட்சியினர் வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.
அதிக மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்கள் மாகாணங்களில் மஹிந்த ராஜபக்சவிற்கு வெற்றி கிட்டியுள்ளது. இது ஓர் வகையிலான வெற்றியேயாகும்.
வெற்றியின் பின்னர் நாட்டின் ஐக்கியம் மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டைக் கருத்திற் கொண்டு செயற்படுவார்கள் என கருதுகின்றோம்.
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை ஒப்புக் கொள்கின்றோம். நாட்டை விட்டு வெளியேறப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை.
நாம் நாட்டிலேயே தங்கியிருப்போம் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.