நடப்பு சாம்பியன் நடையைக் கட்டும் நேரம் நெருங்கியது

495

நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் உத்தப்பா 80 ரன்கள் அடித்து கை கொடுக்க கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் கட்டாக் நகரில் புதன்கிழமை நடைபெற்றது. கொல்கத்தா அணியில் காலிஸ் நீக்கப்பட்டு வங்கதேசத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டார். “காலிûஸ நீக்குவது என்பது கடினமான முடிவு. இருப்பினும் கூடுதல் ஸ்பின்னருடன் களமிறங்கும் வகையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்று கொல்கத்தா கேப்டன் கம்பிர் தெரிவித்தார்.

டாஸ் வென்ற கொல்கத்தா சேஸிங் செய்யும் தைரியத்துடன் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. “ஒவ்வொரு ஆட்டத்திலும் அரைசதம் அடிக்க முயற்சிப்பேன்’ என்று தெரிவித்த மும்பையின் தொடக்க வீரர் சிம்மன்ஸ் 12 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சிதம்பரம் கெüதம் 8 ரன்களைத் தாண்டவில்லை. சிறிது நேரம் போராடிய அம்பாடி ராயுடு தன் பங்குக்கு 33 ரன்கள் எடுத்தார். பொறுப்புணர்ந்து ஆடிய ரோஹித் சர்மா நிதானமாகவும், அதேநேரத்தில் மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்ஸருக்கு விரட்டவும் தவறவில்லை. 45 பந்துகளை சந்தித்து 51 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் தேவையில்லாத “ஷாட்’ அடிக்க முயன்றபோது சுனில் நரைன் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்த ஐபிஎல் தொடக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோரி ஆண்டர்சன் 18 ரன்களுடன் திருப்திபட்டுக் கொண்டார். கடைசி நேரத்தில் பொல்லார்டு 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனால் மும்பை, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.

சுலப இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர் உத்தப்பா தனி ஆளாக போராடி 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் கெüதம் கம்பிர் மற்றும் மணிஷ் பாண்டே இருவரின் விக்கெட்டையும் ஹர்பஜன் கைப்பற்றினார். இருவரும் தலா 14 ரன்கள் எடுத்தனர்.

18.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

யுவராஜ் புராணம்…

 

யுவராஜ் சிங் நிர்ணயிக்கப்பட்ட ஓவர் ஆட்டங்களில் திறமையாக செயல்படும் வீரர். ஆனால், சமீப காலமாக அவரது தன்னம்பிக்கை குறைந்துள்ளது. இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பின் ஒட்டுமொத்த தேசமும் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. கடந்த 2 ஆட்டங்களில் அவர்

ஃபார்முக்குத் திரும்பி விட்டார். 2015 உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் அவர் மேட்ச் வின்னராக ஜொலிப்பார்.

 

முரளிதரன், பெங்களூரு வீரர்.

 

உலகத்தரம் வாய்ந்த வீரரான யுவராஜ் இந்தியாவுக்காக சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளார். அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியது மகிழ்ச்சி. அவரது கிரிக்கெட் வாழ்வு முடிந்து விட்டதாக பலரும் தெரிவித்தனர். எந்த கிரிக்கெட் வீரரையும் அப்படி விமர்சிக்கக் கூடாது. ஏனெனில், யார் எப்போது மீண்டு வருவார் என்பது யாருக்கும் தெரியாது.

விராட் கோலி, பெங்களூரு கேப்டன்.

 

யுவராஜ் சிங் ஒரு சூப்பர் ஸ்டார் போல ஆடினார். சமீபத்தில் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

தற்போது அந்த விமர்சனம் தவறு என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

கெவின் பீட்டர்சன், டெல்லி கேப்டன்.

இன்றைய ஆட்டம்: ராஜஸ்தான் – டெல்லி

இடம்: ஆமதாபாத், நேரம்: இரவு 8 மணி

SHARE