தயாரிப்பளார்களின் நடிகர் என்று பெயரெடுத்த விமல் தான் நடித்த பல படங்களில் தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவர் நடித்த ஜன்னலோரம் படம் பணம் இல்லாமல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட்அ போது தனக்கு வர வேண்டிய சம்பளத்தை பேண்டாம் என்றும் சொல்லியிருந்தார். இவரது இந்த உதவும் குணத்தை தவறாக சிலர் பயன்படுத்துவதாக உணர்ந்த விமல் தற்போது உஷாராகிவிட்டாராம். தன்னோட படம் ஓடிச்சின்னா நிறைய சம்பளம் கிடைக்கும்மென்றும் படம் ஓடலைன்னா சம்பளம் குறைஞ்சிடும் என்பதால் இதில் நாம் ஏன் இவ்வளவு கொடுங்க அவ்வளவு கொடுங்க என்றும் பேசிய படி தன் சம்பளத்தை விட்டுத்தராமல் முழுவதுமாக உஷாராக வாங்கிவிட வேண்டுமென்று முடிவுடுத்துள்ளாராம்.