நடுவர் செய்த குழப்பத்தால் ஏற்பட்ட பரபரப்பு

541
வங்கதேசம்- இந்திய அணிகள் மோதிய நேற்றைய ஒருநாள் போட்டியில் நடுவர் செய்த குழப்பத்தால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.மிர்புரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 307 ஓட்டங்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தவான், ரோஹித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வங்கதேச அணித்தலைவர் மொர்டசா வீசிய 9.2வது ஓவரில் தவான் அடித்த பந்து விக்கெட் கீப்பர் முஷ்பிகுரிடம் சென்றது. ஆனால் அந்த பிடியை அவர் தவறவிட்டார்.

இவர் அந்த பந்தை பிடிப்பதற்குள் நடுவர் ராடு டக்கர் விக்கெட் என கையை உயர்த்தினார். தவானும் மைதானத்தை விட்டு கிளம்பினார்.

இதற்கிடையில் மைதானத்தை விட்டு கிளம்பிய தவானை ஓட்டமுறையில் அவுட் செய்ததாக வங்கதேச வீரர்கள் முறையிட்டனர். ஆனால் இதை நடுவர் ஏற்க மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் சில நிமிடம் குழப்பம் ஏற்பட்டது.

இந்தப் போட்டியில் வங்கதேசம் 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE