நடுவானில் துடித்துடித்த கர்ப்பிணி: பிறந்த குவா குவா குட்டி 

422
அமெரிக்க விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவர், அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ(San Franciso)நகரிலிருந்து ஃபீனிக்ஸ் (Phoneix) நகரம் நோக்கி நேற்று முன் தினம் புறப்பட்ட சவுத்வெஸ்ட் (Southwest Airlines) விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels) மாகாணத்திற்கு வெகு விரைவாக விமானம் திருப்பி அனுப்பட்டது தரையிரங்கியுள்ளது.

இதனையடுத்து விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் மற்றும் செவிலியர் ஒருவர், விமானப் பணியாளர்களின் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.

தற்போது குழந்தையை பெற்றெடுத்த அப்பெண்ணின் உடல்நிலை நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பயணம் தாமதப்பட்டாலும், தாயும் சேயும் நலமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த விமானத்தை சுத்தம் செய்வதற்காக, அதிலிருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் ஃபீனிக்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE