நட்சத்திர ஹொட்டல் சரியில்லை: அதிருப்தியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

186
வங்கதேச தொடருக்காக சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹொட்டலால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வங்காளதேச தொடருக்காக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் டாக்காவில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டலில் தங்கியுள்ளனர்.

இந்த ஹொட்டல் நமது வீரர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை, ஏனெனில் ஹொட்டல் அமைந்துள்ள இடம் மக்கள் நெரிசல் பகுதி.

எளிதில் வெளியே சென்று வர முடியாது. இதனால் வேறு ஹொட்டலுக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உடனடியாக வேறு ஹொட்டலுக்கு மாற்றுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறி, இந்திய வீரர்களை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் சமாதானப்படுத்தியுள்ளது.

SHARE