நான் ஆட்சிபீடமேறிய போது பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்துத்தாருங்கள். போதைப்பொருட்களை நிறுத்துங்கள். நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்துங்கள் எனக் கூறிய சந்திரிக்காவும், ஏனைய அமைச்சர்களும் இப்போது நான் சர்வாதிகாரி, கொலைகாரன் என்றும் குடும்ப அரசியல் செய்துவருவதாகவும் என்னை சித்தரித்து வருகின்றனர். சந்திரிக்கா அவர்களே குடும்ப அரசியல் செய்துவந்தார். தமிழ் அரசியல்வாதிகள் என்னிடம் கூறியபொழுது, ருNP அரசாங்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ் நூலகத்தினை எறியூட்டி அழித்தொழிப்பினை மேற்கொண்டனர் என்றும் சந்திரிக்கா அரசு செம்மணி புதைகுழியினைச் செய்துமுடித்தது எனவும் தெரிவித்தனர். என்னை முள்ளிவாய்க்கால் படுகொலையாளி எனவும், UNP அரசு, ஜே.வி.பியினரை டயரின் மூலம் எறியூட்டினர் எனவும் தெரிவித்திருந்தனர்.
நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். முள்ளிவாய்க்கால் பிரச்சினையை சிறந்த முறையில் கையாளுமாறுதான் நான் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பணித்திருந்தேன். ஆனால் சரத்பொன்சேகாவோ 20 கிலோ மீற்றர் பரப்பளவில் இருக்கக்கூடிய விடுதலைப்புலிகளை கொன்றுகுவித்து யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என விடாப்பிடியாக இருந்தார். சமூகத்தில் அவர்களை இணைக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்காக சரத்பொன்சேகா அவர்கள் பிறநாடுகளிடம் இருந்து ஆயுதங்களையும் கொள்வனவுசெய்து மக்களைக் கொன்றுகுவித்தார். ஆனால் இன்று அவர் சுதந்திரக்கட்சியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றார். நாட்டின் பாதுகாப்பில் நம்பிக்கையில்லாததன் காரணமாக எனது சகோதரரை பாதுகாப்பு செயலராக நியமித்தேன்.
நான் அதிகாரத்தில் இருக்கும் போதே எனது முதுகில் குத்திவிட்டுச் செல்பவர்களிடம் நாட்டின் பாதுகாப்பினைக் கொடுத்தால் இன்னொரு நாட்டிடம் நாட்டை விற்றுவிடவும் தயங்கமாட்டார்கள். இருந்தும் சர்வாதிகாரி யார்?, கொலையாளி யார்? என்பது கூடிய விரைவில் தெரியவரும்.; வெற்றிபெறுவது யார்?, தோல்வியைத் தழுவப்போவது யார்? என்பது தெரியாமல், எனது குடும்பத்தினரைப் பாதுகாப்பேன் என மைத்திரிபால அவர்கள் குறிப்பிடுகின்றார். துரோகச்செயலைச் செய்த மைத்திரிபால என்னைக்காப்பாற்றுவாhர் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டார்.