நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை

371
சவுதியில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.சவுதியில் வசிக்கும் முகமத் சாதிக் ஹனீப்(Mohammed Sadiq Hanif) என்ற நபர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்டார்.இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிலுவையில் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இவரது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதன்பின் நபருக்கு அந்நாட்டின் கிழக்கு மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவரது மரண தண்டனை நிறைவேற்றத்துடன் சவுதியில் இந்த வருடம் மரண தண்டனை நிறைவேற்றத்துக்குள்ளானவர்கள் தொகை 83ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இவர், 11 வது பாகிஸ்தானியர் என்பது குறிப்பிடத்தக்கது.

smuggler_beheaded_002

SHARE