நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த விலையுயர்ந்த பரிசு- நடிகையே போட்ட பதிவு, இத்தனை கோடியா?

69

 

-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, பாக்யராஜ்-பூர்ணிமா, அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் என இப்படி நிஜ வாழ்க்கையிலும் இணைந்த பிரபலங்களின் லிஸ்ட் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த லிஸ்டில் இணைந்த முக்கியமான பிரபலங்கள் தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களின் காதல் நானும் ரவுடித்தான் படப்பிடிப்பில் தொடங்கி இப்போது திருமணம், குழந்தைகள் என வந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நிறைய புதிய தொழில்களை தொடங்கி வருகிறார்கள், அதேசமயம் தங்களது சினிமா பயணத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

புதிய பரிசு
கடந்த நவம்பர் 18ம் தேதி நடிகை நயன்தாராவின் பிறந்தநாள், அவருக்கு விக்னேஷ் சிவன் என்ன பரிசு கொடுத்திருப்பார் என ரசிகர்கள் யோசித்திருப்பார்கள், தற்போது அதற்கான பதில் வந்துள்ளது.

அதாவது நடிகை நயன்தாரா பிறந்தநாள் பரிசாக விக்னேஷ் சிவன் Maybach காரை பரிசாக கொடுத்துள்ளாராம்.

காரின் லோகோவை மட்டும் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு தனது கணவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.

மிகவும் விலையுயர்ந்ததாக கூறப்படும் இந்த காரின் மதிப்பு ரூ. 2 கோடி முதல் ரூ. 4 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE