நரேந்திரமோடி – விக்னேஸ்வரன் சந்திப்பின் பின்னர் விடுதலைப்புலிகளின் மீதான தடை நீக்கப்படலாம்

373

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் மீதான தடைச்சட்டத்தினை நீக்கியதனை அடுத்து பல்வேறு நாடுகளும் விடுதலைப்புலிகளின் மீதான தடைச்சட்டத்தினை நீக்கவுள்ள அதேநிலையில் இரகசியமான முறையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைப்பதற்கான முன் நடவடிக்கைகளை இந்தியாவின் பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ளது. சீன வல்லாதிக்கத்தினை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தவேண்டுமாயின் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஒரேயொருவழி விடுதலைப்புலிகளை மீள கட்டியெழுப்புவதாகும்.

அது மட்டுமல்லாது ஒரு நிர்வாகக் கட்டமைப்பினை வைத்திருந்த விடுதலைப்புலிகள் தமிழினத்;தின் விடுதலைக்காக போராடிய அவர்கள் எவ்வாறழிக்கப்பட்டனர். சர்வதேச நாடுகள் தற்பொழுது இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என அடித்துக்கூறிவருகின்றன. இவ்வாறான நிலையில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியாவிற்கு அழைத்து விடுதலைப்புலிகளை தடைநீக்குவது தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையானது தமிழ் மக்களின் அடுத்தடுத்த அரசியலை முன்கொண்டு செல்வதற்கு வாய்ப்பாக அமையப்பெற்றுள்ளது. வடமாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தியரசு அனுகிக்கொள்வதனுடைய காரணங்களைப் பார்;க்கின்றபொழுது, சட்டம் தொடர்பாக விடுதலைப்புலிகளை அங்கீகரிப்பதற்கு ஏதும் தடைகள் இருக்கின்றனவா என்பது பற்றி தெளிவானதொரு விளக்கத்தினை பெற்றுக்கொள்ளமுடியும் என்கின்ற காரணத்தினால் தற்பொழுது இந்தியரசு விக்னேஸ்வரனை அனுகிப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதனூடாக தமிழ் மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலம் காத்திருக்கிறது எனலாம்.

SHARE