நல்லாட்சி எனும் பெயரில் பழிவாங்க வேண்டாம் என பொதுபல சேனா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று காலை பொதுபல சேனா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.