நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டால் இராணுவ உறவுகளை வலுப் படுத்திக்கொள்ள முடியும்:-

709

Nisha_CI

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டால் இராணுவ உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும் அமெரிக்கா நிபந்தனை
இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக்கா, நிபந்தனை விதித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென மத்திய மற்றும் தென் ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிஷ்டவசமாக இலங்கையில் சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் நம்பகமான ஓர் பொறிமுறைமையை உருவாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE