நவிபிள்ளையின் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க தயாராகும் மங்கள

374
வடக்கில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்கள் குறித்து அறியவென கூறி ராஜபக்ஷ அரசு நியமித்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு மகிந்தவையும் கோத்தபாயவையும் பாதுகாக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணிக்க மகிந்த ராஜபக்ஷ அரசு மூன்று நிபுணர்களை நியமித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை பாதுகாக்கவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக சுமத்தப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களில்

இருந்து அவர்களை தப்புவித்து, அந்த குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்புகளை சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மீது சுமத்த முயற்சிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயாதீனமான தேசிய விசாரணையை நடத்துவதே நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை நிறுத்த ஒரே வழி என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு.

இதனை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம். விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி நியமித்துள்ள மூன்று நிபுணர்கள், ஜனாதிபதியையும் பாதுகாப்புச் செயலாளரையும் காப்பாற்றி, சில இராணுவத்தினருக்கு எதிராக அறிக்கையை வழங்க போவது உறுதி.

கட்டளையிடும் உயர் அதிகாரிகளை காப்பாற்றி கீழ் மட்டத்தில் இருப்பவர்களை காட்டிக்கொடுக்கும் வரலாறு இவர்களுக்கும் உள்ளது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நவிபிள்ளையின் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க தயாராகும் மங்கள

நவநீதம்பிள்ளையின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் பணம் தொடர்பில் சாட்சியமளிக்க தாம் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை காட்டிக்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் இடமளிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தினர் இன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அடிமைகளாக மாறியுள்ளனர். உலகில் உள்ள சிறந்த இராணுவங்களில் ஒன்றாக உலகம் இலங்கை இராணுவத்தை ஏற்றுக்கொண்டிருந்தது.

ஒழுங்கம் நிறைந்த இராணுவமாக உலகம் இலங்கை இராணுவத்தை ஏற்றுக்கொண்டிருந்தது.

இதன் காரணமாக இலங்கையில் மாத்திரமல்லாது வேறு நாடுகளின் அமைதியை பாதுகாக்க இலங்கை இராணுவம் அழைத்து செல்லப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பும் மிகவும் சிறந்த இராணுவம் இருக்கும் நாடுகளில் இருந்து மட்டுமே இராணுவத்தினரை தெரிவு செய்யும்.

எனினும் தலைவர்களின் தவறுகள் காரணமாக, தலைவர்கள் வழங்கிய கட்டளைகளை செயற்படுத்தியதால், இலங்கையின் இராணுவம் இன்று உலகில் அருவருக்கத்தக்க இராணுவமாக மாறியுள்ளதுடன் மிகவும் துரதரிஷ்டவசமான நிலைமையாகும்.

இலங்கை இராணுவம் ஒழுக்கமான இராணுவம் என்பது நாம் அனைவரும் அறிந்தது. இராணுவம் தனது தேவைக்காக எப்போது மற்றவர்களுக்கு துன்பங்களை ஏற்படுத்துவதில்லை. எவரையும் தாக்கவும் கொலைகளை செய்வதுமில்லை.

இராணுவம் ஒழுக்கமானதாக இருந்தாலும் மேல் மட்டத்தில் வழங்கப்படும் தவறான உத்தரவுகளாக இருந்தாலும் அதனை செயற்படுத்த வேண்டும்.

எப்படியான தவறான கட்டளையாக இருந்தாலும் கீழ் மட்டத்தில் இருக்கும் இராணுவ வீரன் அதனை செயற்படுத்தியே ஆகவேண்டும். முடியாது என்று கூறி இயலாது. மறுத்தால் அவர்கள் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம். அல்லது சுட்டுக்கொல்லப்படலாம். பல பிரச்சினைகள் இருக்கின்றன.

இதன் காரணமாகவே போரில் சில குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என நான் கூறுகிறேன்.அதில் உள்ள உண்மை, பொய்கள் எமக்கு தெரியாது. எனினும் குற்றச்சாட்டுக்களை தவிர்த்து விட முடியாது.

அவற்றை எதிர்கொண்டு எமது நற்பெயரை பாதுகாக்க வேண்டும். நாட்டின் நற்பெயரையும் இராணுவத்தின் நற்பெயரையும் பாதுகாக்க வேண்டும்.

சர்வதேசத்திற்கு சென்று விடுதலைப் புலிகளின் குற்றங்களை ஏன் கூறுவதில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேட்கிறார். விடுதலைப் புலிகளில் பொறுப்புக் கூற கூடியவர்கள் எவருமில்லை. இதனால் அதை பேசி பயனில்லை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE