நவீன முறையில் போலியோ தடுப்பு

322
போலியோ நோயை தடுப்பதற்காக ஊசி மருந்தொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது குழந்தைகளுக்கு வாய்மூலம் போலியோ நோய் தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது.

இம்மருந்தை எதிர்வரும் காலங்களில் ஊசி மூலம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் பொது சுகாதார விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.

இம்முறைமை எதிர்வரும் மே மாதம் முதல் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளது என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போலியோ தடுப்பு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE