நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்.. என்னடா இது சல்மானுக்கு வந்த சோதனை

77

 

பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தீபாவளி விருந்தாக வெளிவந்த திரைப்படம் டைகர் 3. ஹிந்தி படமான இருந்தாலும் இந்தியளவில் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஷாருக்கான், ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ சல்மான் கான், கத்ரினா கைஃப்பின் அதிரடி சண்டை காட்சிகள் என படத்தின் மேல் ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

ஆனால், அதை முழுமையாக டைகர் 3 பூர்த்தி செய்யவில்லை. இதனால் படத்தின் வசூல் முதல் நாளுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக அடிவாங்க துவங்கியுள்ளது.

நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்
முதல் நாள் உலக அளவில் ரூ. 95 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது டைகர் 3. ஆனால், தற்போதை நிலவரம் பலருக்கும் ஷாக்கிங் தான்.

ஆம், டைகர் 3 இதுவரை உலகளவில் ரூ. 360 கோடிக்கும் மேல் மட்டுமே வசூல் செய்துள்ளது. வட இந்தியாவை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

சல்மான் கானின் நடிப்பில் வெளிவந்த டைகர் 3 படத்திற்கே இப்படியொரு நிலைமையா என பலரும் கேட்டு வருகிறார்கள்.

SHARE