நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத் தொடர் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

487

நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத் தொடர் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வழமையாக நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி, வெள்ளி வரை நடைபெறுவதுண்டு.

இந்த சம்பிரதாயத்தை மீறி தற்போதைய அவசர கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெள்ளி வரை நடைபெறவுள்ளது.

இந்த அவசர கூட்டத்தொடரின் போது காணி, நிலங்கள் தொடர்பான பல விசேட சட்டமூலங்களை அவசர கதியில் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

எனினும் நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் அதனை உறுதிப்படுத்து மறுத்துள்ளது.

இந்த அவசரக் கூட்டத்தொடரின் பின்னர் நாடாளுமன்றத்தின் வழமையான ஒழுங்கின் பிரகாரம் வரவு- செலவு விவாதத்திற்கான கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

 

SHARE