நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநயாகர் சமல் ராஜபக்‌ஷ நேற்றுக் கையொப்பம் இட்டார் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

359

 

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநயாகர் சமல் ராஜபக்‌ஷ நேற்றுக் கையொப்பம் இட்டார் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். இதன் அடிப்படையில் நேற்றிலிருந்து (15.05.2015) 19ஆவது திருத்தச் சட்டம் உத்தியோபூர்வமாக அமுலுக்கு வருகின்றது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். அரசால் சமர்ப்பிக்கப்பட அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இது நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் சில திருத்தங்களை முன்வைத்திருந்தன. இந்தத் திருத்தங்கள் காரணமாக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது ஆவணத்தில் சபாநாயகர் கையொப்பமிடவில்லை. திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட புதிய ஆவணத்தின் சிங்கள ஆவணம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், வெளிநாடு சென்றிருந்த சபாநாயகர் நேற்று நாடு திரும்பிய பின்னர் மேற்படி ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

mahinda-rajapaksa-65650+fd

SHARE