நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

150

 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

tna_1-3-2015-3

தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆயத்தங்களில் ஈடுபட்டு உள்ளது. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் யார் யார் போட்டியிடுவது எங்கே எங்கே போட்டியிடுவது போன்ற விடயங்கள் தொடர்பில் கடந்தவாரம் தமிழரசு கட்சி அலுவலகத்தில் கூடி ஆராய்ந்து உள்ளோம்.

அதுதொடர்பில் மறு பரிசீலனை செய்து ஒரு தீர்வை கண்டு ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்போம் என தெரிவித்தார்.

SHARE