நாடாளுமன்றை எந்த சந்தர்ப்பத்திலும் கலைப்பதற்கு ஏதுவான நிலையில் வர்த்தமானி அறிவித்தல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

357

 

நாடாளுமன்றை எந்த சந்தர்ப்பத்திலும் கலைப்பதற்கு ஏதுவான நிலையில் வர்த்தமானி அறிவித்தல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவையேற்படும் போது, எந்த நேரத்திலும் நாடாளுமன்றைக் கலைத்து விடக் கூடிய வகையில் திகதியிடப்படாது வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது.

SL-parliment-600x381-720x480

திகதியையும் கையொப்பத்தையும் இட்டு எந்த நேரத்திலும் நாடாளுமன்றைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சந்தர்ப்பம் உண்டு.  எதிர்வரும் நாட்களில் எந்தவொரு நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29ம் திகதியளவில் நாடாளுமன்ற கலைப்பு குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிடுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE