நாடாளுமன்ற கூட்டங்களில் பங்குபற்றுதல் தொடர்பில் வெளியான தகவல்

79

 

வெளியாட்களை, நாடாளுமன்ற கட்டிடக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு அனைத்து குழுக்களின் தலைவர்களும் தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(19) அறிவித்துள்ளார்.

குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அறிவித்தல்
இலங்கை கிரிக்கட் நிர்வாக அதிகாரிகள், அண்மையில் நாடாளுமன்ற கோப் குழு விசாரணைக்கு அழைக்கப்பட்டவேளையில், கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகனும் அதில் பங்கேற்றமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்தே சபாநாயகர், இன்று(20) தமது அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உத்தியோகபூர்வ கடிதத்தலைப்புக்களை, தமது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குழு தலைவர்களிடம் கோரியுள்ளார்.

SHARE