நாட்டிங்காம் ஆஷஸ் டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா

184
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து வேகப்பந்து விச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் நிலைகுலைந்து 60 ரன்களில் சுருண்டது. பிராட் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்திருந்தது. ஜோ ரூட் 124 ரன்களுடனும், வுட் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் மேலும் 6 ரன்கள் எடுத்து 130 ரன்களில் ஆட்டம் இழந்தார். வுட் 28 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

9-வது நபராக களம் இறங்கிய மொயீன் அலி 27 பந்தில் 38 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருக்கும்போது டிக்ளேர் செய்வதாக அந்த அணியின் கேப்டன் குக் தெரிவித்தார். பிராட் 24 ரன்னுடனும், பின் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பிரல் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனால் 331 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டகரர்களான வார்னரும்(64), கிறிஸ் ரோஜர்சும்(52) சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. மேலும் இங்கிலந்து பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இரண்டாம் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா 90 பின்தங்கியுள்ள நிலையில் அந்த அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது

SHARE