நாட்டின் ஊழல் மிகுந்த அரசியலே மக்களை இந்த இடத்தை நோக்கி தள்ளியுள்ளது: -சரத் பொன்சேகா

402
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் சிதைந்து போயுள்ளதை 90 வீதமான மக்களின் அமைதி எடுத்துக் காட்டுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கு பல வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்கினர். அவை என்றுமே நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மக்களின் வாழ்க்கை சுமையும் அழுத்தங்களும் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. மக்கள் மிகவும் துன்பரகமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் ஊழல் மிகுந்த அரசியலே மக்களை இந்த இடத்தை நோக்கி தள்ளியுள்ளது. இலங்கையின் அரசியல்வாதிகள் தமது வயிற்றை நிரப்பிக்கொள்ளவே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயிற்று பிழைப்பு அரசியலே நாட்டில் இருக்கின்றது எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

 

SHARE