நாட்டில் பௌத்த பலத்தை மேலோங்கச் செய்வதே தமது நோக்கம்- கலபொடத்தே ஞானசார தேரர்

384

இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பௌத்த பலத்தை மேலோங்கச் செய்வதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள பௌத்த மத உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பௌத்த மதக் கோட்பாடுகளையே தாம் பின்பற்றி வருவதாகவும், வன்முறைகள், மனிதாபிமான நடவடிக்கைகளில் உடன்பாடில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறியளவிலான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த போதிலும் சர்வதேச வலையமைப்பு வலுவாகக் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அப்பாவிகள் என்ற போதிலும், கடும்போக்குவாதிகள் அப்பாவி முஸ்லிம்களை மனம் மாற்றி விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் கடும்போக்குவாத கொள்கைகளை எப்போதும் பின்பற்றியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மதத்தைப் பாதுகாப்பதே பிரதான இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர்கள் மிகவும் அமைதியானவர்கள் எனவும் முஸ்லிம்களே பிரச்சினைகளை தூண்டி விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE