நாட்டுக்கு ஏற்படப் போகும் அழிவைத் தடுக்கவே சகல கட்சிகளும் இணைந்தன செம்மணி புதைகுழியின் சரித்திர நாயகி சந்திரிக்கா

613

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பணியாற்றியமையால்தான் எமது நாடு சுனாமிப் பேரலை பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டெழ முடிந்தது. இதேபோன்று இப்போது நாட்டுக்கு ஏற்படப்போகும் பேரனர்த்தத்தைத் தடுக்க மீண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார். – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். சுனாமிப் பேரலை அனர்த்தம் ஏற்பட்ட பத்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று கொழும்பு காக்கைதீவில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய சந்திரிகா தெரிவித்த விடயங்கள் வருமாறு:- சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் 2004 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி இணைந்து செயலாற்றின. இதனால் குறுகிய காலத்திலேயே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடிந்தது. இதைப்போன்றே இப்போதும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் ஜனவரி 8 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் வெற்றிபெறுவோம். ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதி முறைகேடு சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு வழங்கிய அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பின்னர் தான் வழங்கிய தீர்ப்புத் தவறானது என்று கூறியிருந்தமையையும் நினைவுபடுத்தினார். அவர் மேலும் கூறுகையில் இப்போதிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாடு பெரும் அழிவைச் சந்தித்தது. இதனால் நாட்டை மீளகட்டியெழுப்ப வேண்டும்

ஆகஸ்ட் 7, 1996 – கிருஷாந்தி குமாரசாமி 18 வயதே ஆன, எதிர்காலம் பற்றிய கனவுகள் நிறைந்திருந்த பள்ளி மாணவி. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முதல் அமர்வை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிருஷாந்தியை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலுள்ள கைதடி விசாரணைச் சாவடியில் இருந்த சிப்பாய்கள் விசாரணைக்கென்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார்கள். அந்தச் சம்பவத்தை வீதி வழியே சென்றுகொண்டிருந்த சிலர் அவதானித்திருக்கிறார்கள். நேரம் கடந்தும் வீடு திரும்பாத கிருஷாந்தியைத் தேடி அவரது தாயார் ராசம்மா, கிருஷாந்தியின் தம்பி பிரணவன், குடும்ப நண்பர் கிருபாமூர்த்தி மூவரும் போயிருக்கிறார்கள். அவர்களும் திரும்பி வரவில்லை. 45 நாட்களின் பின் கிருஷாந்தி உட்பட நால்வரது உடல்களும் இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்டிருந்த செம்மணியிலிருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்டன.

+மனிதவுரிமை அமைப்புகளின் போராட்டங்கள், தமிழ் அரசியல்வாதிகள்-உறவினர்களின் (செல்வாக்கு உள்ளவர்கள்) பகீரதப் பிரயத்தனத்தின் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் ஒருவனான கோப்ரல் தேவகே சோமரட்ண ராஜபக்சே என்பவன் தனது வாக்குமூலத்தில் கீழ்வருமாறு சொல்கிறான்:

“எங்களில் ஆறாவது நபர் கிருஷாந்தியோடு வல்லுறவு கொள்ள முயன்றபோது தனக்கு ஐந்து நிமிடங்கள் இடைவெளி அளிக்குமாறு கெஞ்சினாள். மேலும், தண்ணீர் தருமாறு விடாமல் கெஞ்சிக்கொண்டிருந்தாள். நாங்கள் அவளுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை.”

சோமரட்ண ராஜபக்சேயின் ஒப்புதல் வாக்குமூலம் ‘செம்மணி புதைகுழி’என பின்னர் அழைக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு இட்டுச் சென்றது. அங்கே ஏறத்தாழ நானூறு தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் அரச படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களே அவர்கள். அவர்களது உடல்கள் சித்திரவதைகளால் சிதைந்து போயிருந்தன. கிருஷாந்தியினதும் அவரது சகோதரனதும் உடல்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டிருந்தது. தாயினதும், குடும்ப நண்பரதும் கழுத்துகளிலும் உடலிலும் கயிறு இறுக்கப்பட்டிருந்தது. இறுதிக் கிரியைகளுக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட உடல்கள், இரண்டு மணி நேரத்துக்குள் தகனம் செய்யப்பட்டுவிட வேண்டும் என அரச தரப்பினரால் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டனர். கிருஷாந்தியின் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது நிறைவேற்றப்படவில்லையாயினும், தன்னை உலக அரங்கில் நீதியின் பாதுகாவலனாக நிலைநிறுத்துவதற்கு அந்தத் தீர்ப்பை இன்றுவரை இலங்கை அரசு பயன்படுத்திவருகிறது.

download (4) images (6) krishanthy matala-cl1 maverar-illam-kilinochi_2009

SHARE