நாட்டை விட்டு தப்பிச் செல்லும் எந்த தேவையும் இல்லை: விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதன்

375

 

இலங்கையில் இருந்து தான் தப்பிச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். கே.பி தேர்தல் நேரத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றதாக சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், கே.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய ஊடகவியலாளரிடம், தான் இன்னும் கிளிநொச்சியிலேயே இருப்பதாக கே.பி கூறியுள்ளார்.

நாட்டை விட்டுச் செல்லும் எந்த தேவையும் தமக்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கம் தான் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதையும் அறியவில்லை எனவும் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அந்த மனிதாபிமான பணிக்கு புதிய அரசாங்கம் தனக்கு உதவும் என நம்புவதாகவும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

 

SHARE