நானே உலங்கு வானூர்தியை யோசித்த ராஜபக்சவுக்கு விற்பனை செய்தேன்!- திரைப்பட இயக்குநர்

399

 

கொழும்பு நாரஹன்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலங்கு வானூர்தி தம்மால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக திரைப்பட இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்

சிங்கள திரைப்பட இயக்குநரான சந்திரன் ரட்ணம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தாமே இந்த உலங்குவானூர்திக்கு சொந்தக்காரன் என்றபோதும் கடற்படை அதிகாரியாக இருக்கும் யோசித்த ராஜபக்ச கோரியமை காரணமாக அதனை அவருக்கு விற்பனை செய்து விட்டதாக ரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த உலங்குவானூர்தி பயன்படுத்தலுக்கு தயார் நிலையில் இல்லை.

அத்துடன் இது உரிய இடம் எதிலும் பதிவு செய்யப்படவில்லை. இலங்கையின் வான்பரப்பில் பறப்பதற்கான உரிமங்களையும் அது கொண்டிருக்கவில்லை என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தி மீட்பு

மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தியொன்று கொழும்பில் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து உலங்கு வானூர்த்தி மீட்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை முதல் குறித்த உலங்கு வானூர்தியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திற்கு சொந்தமான களஞ்சியப் பகுதியொன்றினுள் இந்த உலங்கு வானூர்தி மீட்கப்பட்டுள்ளது.

SHARE