நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன்-ரணில்

455
போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

போரை பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.  நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன்.

சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் வேறும் வழிகள் இருந்திருக்கலாம்.  இறுதிக் கட்ட போரை முடிவுக்குக் கொண்டு வரும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சில உளவியல் காரணிகளையும் அரசியல் காரணிகளையும் கருத்திற்கொள்ளவில்லை.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.  ஜனாதிபதி போரை எப்படியாவது தீர்க்கவே முயற்சித்தார்.  போரின் போது சிவில் மக்கள் உயிரிழக்கவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இரண்டு தரப்பினராலும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கலாம்.  போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஏன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திக்க உறுதியளித்தார்.

நாட்டில் சரியான நீதிக் கட்டமைப்பு காணப்படுகின்றது.  இதன் ஊடாக விசாரணை நடத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கலாம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

SHARE