நான் ஒருபோதும் அரசியலுக்கு பிரியாவிடை வழங்கப் போவதில்லை – பசில் ராஜபக்ச

337
தான் ஒருபொழுதும் அரசியலுக்கு பிரியாவிடை வழங்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமீபகாலமாக பசில் அரசியலை விட்டு விலகப்போவதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நேற்று சிங்கள வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசியல் குடும்பத்தில் பிறந்த நான் அரசியலை விட்டு விலகுவதற்கு தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. சவால்களுக்கு முகம் கொடுப்பது அரசியல் பரம்பரையில் பிறந்த எனக்கு ஒரு பெரிய பிரச்சனை இல்லை. அரசாங்கத்தின் சவால்களுக்கு முகம் கொடுப்பதொன்றும் பெரிய விடயமல்ல.

கட்சியின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக அமைதியான முறையில் நான் செயற்படவுள்ளேன் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

SHARE