நான் கடினமான சூழ்நிலையை விரும்புபவன் என மணீஷ் பாண்டே

531
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டே, கொல்கத்தா அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தார்.

இவர் இந்தப் போட்டியில் 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி கடினமான ஓட்ட இலக்கை அடைவது எளிதானது. கடைசியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா 2வது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்த வெற்றி குறித்து, நான் கடினமான சூழ்நிலையில் விளையாடுவதை எப்பொழுதும் விரும்புபவன். ஆரம்பத்தில் இருந்த நிலையை தக்க வைத்து கொண்டால் நாங்கள் 200 ஓட்டங்களை எடுத்து விடுவோம் என்று அந்த சமயத்தில் நான் கருதினேன்.

மேலும், இதுவரை ரஞ்சி கிண்ணம், இரானி கிண்ணம் ஆகிய பட்டங்களை பெற்றுள்ளோம். ஐ.பி.எல். போட்டி மட்டும் வெற்றி பெறாத ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஐ.பி.எல் கிண்ணத்தையும் வென்றுள்ளது அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

SHARE