நான் தமிழரசுக்கட்சிகாரனல்ல! அதனால் நீக்கவும் முடியாது! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!

324

 

 

நான் தமிழரசுக்கட்சிகாரனல்ல! அதனால் நீக்கவும் முடியாது! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!

நான் தமிழரசுக்கட்சி உறுப்பினனல்ல. அதனால் மாவையோ எவருமோ அக்கட்சியிலிருந்து என்னை நீக்கமுடியாதென தெரிவித்துள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். கொழும்பிலிருந்து தொடர்புகொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளரிடமே இவ்வாறு சிரித்துக்கொண்டு தெரிவித்தார் விக்கினேஸ்வரன்.

எனினும் மற்றொரு சுயாதீன தகவல், பதிவு இணையத்தில் வெளியதான செய்தி தொடர்பில் முதலமைச்சர் மாவையுடன் தொடர்பு கொண்டதாகவும் தான் பொதுவாகவே கட்சியின் கட்டுப்பாட்டை எவர் மீறினாலும் ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்ததாகவும் தங்களுடைய பெயரை குறிப்பிடவில்லையென சமாளித்தது பதிலளித்துள்ளாதாகவும் தெரிவிக்கின்றது.

முன்னதாக கிளிநொச்சியில் இடம்பெற்ற மற்றொரு பாடசாலை நிகழ்விலும் இதே கருத்தினை வெளியிட்ட மாவை குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து தீர்ப்பு எழுதிக்கொண்டிருந்தவர்களிற்கு யதார்த்தம் தெரியாதென குறை சொல்லியுள்ளார். அப்போது மற்றொரு கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அங்கிருந்ததுடன் அவரும் அதனை ஆமோதித்துள்ளார்.

முன்னதாகவே முதலமைச்சர் கனவிலிருந்த மாவை கொழும்பிலுள்ள இந்திய தூதரக அழைப்பின் பின்னர் ஞானோதயம் பெற்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டது தெரிந்ததே.

இந்நிலையில் இன அழிப்பு பிரேரணை, ரணில் தலைமையிலான அரசை புறக்கணித்துவருகின்றமை, சோரம் போகாது நிஜத்தை பேசிவருகின்றமை போன்றவை என்றுமில்லாத அளவில் முதலமைச்சரது செல்வாக்கினை அதிகரிக்க வைத்துள்ளது.

கூட்டமைப்பிலுள்ள பிறகட்சிகளும் அண்மைக்காலமாக முதலமைச்சர் தொடர்பில் முன்வைக்கின்ற கடுமையான விமர்சனங்களை தவிர்த்துவருவதுடன் மென்போக்கையே கடைபிடிக்கின்றன.

மாவை சேனாதிராசா முதலமைச்சர் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலான செய்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் பதிவு தனது செய்தி மூலங்கள் தொடர்பிலும் கூடிய அக்கறை கொண்டு செயற்படுகின்றதென்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றது.

மாவை கடந்த மூன்று நாட்களினில் நடத்திய சந்திப்புக்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் தெரிந்தேயுள்ளதென்பதையும் அறியத்தருகின்றது.

 

SHARE