நான் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கிறேன்!

89

 

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு நான் எப்போதும் மதிப்பளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”கடந்த சில நாட்களாக 30% கிரிக்கெட் தொட்பிலும், 30% நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், 15% கோப் குழு குறித்து விவாதித்துள்ளோம். 25% மட்டுமே விவாதிக்க வேண்டிய வரவு செலவு திட்டம் குறித்து நாம் விவாதித்துள்ளோம். பொருளாதர பிரச்சினை உண்டு, வரி தொடர்பில் பிரச்சினை உண்டு. அதனால் நாட்டு மக்களில் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே சிறந்தது என நினைக்கிறேன்.

மேலும், நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கிறோம். அதற்கு சட்ட ஆலோசனையை நாடுகிறோம். சில சமயம் இந்த பாராளுமன்றில் கூட பார்க்கிறோம். நீதிமன்றில் சாதகமாக தீர்ப்பு வந்தால் நீதிமன்றம் நல்லது என்று சொல்வார்கள். பாதகமான தீர்ப்பு வந்தால், தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் பெயர், நீதிபதி அமர்ந்திருக்கும் அறை, அவர்களின் உறவுமுறை குறித்தும் பாராளுமன்றத்தில் நேரடியாக விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் அப்படி செய்ய மாட்டோம். இந்த நாட்டில் நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.” என்று கூறினார்.

SHARE