நாமலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை.

311

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர். அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குனகொலபெலஸில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் ஆயுதத்துடன் வந்த சம்பவம் மற்றும் தென் மாகாண சபை உறுப்பினர் டி.வி உபுல், நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவின் அதிகாரிகளை கல்லெறிந்து கொலை செய்வதாக கூறியமை தொடர்பில் நாமல் எம்.பி.யிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.NAMAIL 01NAMAIL 02NAMAILNAMAIL 03

SHARE