நாமலின் ஒரு இரவு விருந்துபசாரத்துக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் செலவிட்டமை அம்பலம்!

166
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கல்கிஸை பெரிய ஹோட்டலில் அளித்த விருந்தில் ஒரு இரவுக்காக ஏழு இலட்சத்து எழுபதாயிரத்து முப்பது நான்கு ரூபா செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த விருந்துபசார நிகழ்வு கடந்த வருடம் மார்ச் மாதம் 9ம் திகதி நடத்தப்பட்டுள்ளது.

அன்று நாமல் ராஜபக்சவின் பெயரில் ஹோட்டலில் ஆறு சொகுசு அறைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளுக்கு 9ம் திகதி உலகத்திலேயே மிகவும் விலை கூடிய மதுபான வகைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த வெளிநாட்டு மதுபான வகைகளுக்குள் வெள்ளை வயின், இலைக்கஞ்சி, ஸ்கொச், விஸ்கி, ஜின், ரம், வொட்கா, பழைய சாராயம் உட்பட பியர் வகைகளும் பயிட் வகைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

namal-380-120615-seithy

பில்களில் அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு சிகரெட்டு வகைகளும் பெறப்பட்டுள்ளன.

இதற்கான பில்களை நாமல் ராஜபக்ச அவரது செயலாளர்களான சஞ்ஜய சமரசிங்க மற்றும் எரங்க ஆகியோரின் பெயர்களில் பெற்றிருந்தாலும் அந்த பில்களுக்கான கட்டணத்தை செலுத்தி இருப்பது பொதுமக்களின் பணத்திலே ஆகும்.

SHARE