“நாமல் ராஜபக்ச என்பவர் ஒரு முழு முட்டாள். அவருக்கு நாட்டைப்பற்றியோ எமது இனத்தைப் பற்றியோ எந்த அறிவோ அக்கறையோ இல்லை. மஹிந்தவும் இவரைப் போன்ற ஒருவரே.
நான் பசில் ராஜபக்சவைப் பற்றியும் ஒன்று சொல்லியாக வேண்டும். பசில் என்வபர் முஸ்லிம்களுக்கெனப் பிறந்த ஒருவர். நீங்கள் நான் சொல்லும் எல்லாவற்றையும் போய் பதிவேற்றுங்கள். நான் யாருக்கும் பயந்தவன் அல்ல.”
பொது பல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது பற்றி கேற்கப்பட்டபோது ஞானசார பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
“தீண்டத்தகாதவர்கள் சொல்லிக்கொண்டிருப்பவைகளைப் பற்றி எல்லாம் நாம் அலட்டிக்கொள்ளவில்லை. நாம் இதுவரை ஒரு துப்பாக்கியையோ அல்லது ஒரு பெட்ரோல் குண்டு ஒன்றையோ கையில் எடுத்ததில்லை. ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். எமது நாடு, எமது இனம் மற்றும் எமது மதத்திற்காக எந்த ஆயுதத்தையும் கையில் எடுக்கத் தயங்கப் போவதில்லை.”
பொது பல சேனா அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்த்ப்பட்டதைத்தொடர்ந்து பயங்கரவாதி ஞானசாரவின் பிரான்ஸ் நாட்டுக்கான வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்திலும் பொது பல சேனா உறுப்பினர்களின் மேற்கத்தைய நாடுகளுக்கான வீசா பெறுவதில் சிக்கல்களை எதிர் நோக்குவர் என்பது வெளிப்படையான ஒரு விடயம் ஆகும்.