நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் பார்க்கிங் படம் எப்படி இருக்கு.

38

 

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. அயோத்தி, டாடா, போர் தொழில், குட் நைட், சித்தா ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது பார்க்கிங் படம் இந்த வரிசையில் வெளியாகியுள்ளது.

பார்க்கிங்
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரு நபர்களுக்கு இடையே இருக்கும் ஈகோ அதன்மூலம் வரும் சண்டை, அதனால் இருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் தான் பார்க்கிங் படத்தின் கதை.

இந்நிலையில், சிறப்பு காட்சியில் பார்க்கிங் படத்தை பார்த்த திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். பார்க்கிங் படம் எப்படி இருக்கிறது என்று இவர்களுடைய விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

விமர்சனம்
நடிகர் ஹரிஷ் கல்யாணின் கெரியர் பெஸ்ட் நடிப்பு. எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு வேற லெவல். கண்டிப்பாக அவருக்கு பல விருதுகள் கிடைக்கும். அதே போல் தான் நடிகை இந்துஜாவும் நடிப்பில் அசத்தியுள்ளார்.

இயக்குனர் ராம் குமாரின் இயக்கம் சூப்பர். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அருமை. மேலும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-யின் பின்னணி இசை திரைக்கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவுகிறது.

SHARE