நாவலர் முன்பள்ளி மழலைகளுக்கான விளையாட்டுப்போட்டி 06.06.2015 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வவுனியா மதகுவைத்தகுளம் சனச சமூக மண்டப மைதானத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் எஸ்.ஜேசுராஜா மற்றும் அதன் செயலாளர் மணியரசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.தியாகராஜா(வடமாகாணசபை உறுப்பினர்), சிவசக்தி ஆனந்தன்(வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), சிவமோகன் (வடமாகாணசபை உறுப்பினர்), நடராசா (வடமாகாணசபை உறுப்பினர்), கிஷோர் சுகந்தி (வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்), திருமதி.வாஜிபா யுனைட் (சனச சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), எஸ்.வேலுப்பிள்ளை (மூன்றுமுறிப்பு கிராமசேவையாளர்), க.பொன்னம்பலம் (மூன்றுமுறிப்பு பாடசாலை அதிபர்), சி.மகேந்திரன் (என்க்காட்டோ நிறுவன பணிப்பாளர்), திரு.விஜயராசா (ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர்) மற்றும் மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் ஆகியோரும் கலந்து இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.
படங்களும் தகவலும் :- இ.தர்சன்