நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவினால் தன்னை கொடுமைப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

360
நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவினால் தன்னை கொடுமைப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டுபாயில் மெரியடர் ஹோட்டல் தன்னுடையதல்ல என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலர் 4.8 கோடி( 634.03 கோடி ரூபாய்) டுபாய் மெரியட் ஹோட்டலும், அமெரிக்க டொலர் 19 கோடி (2509.71 கோடி ரூபாய்) உருக்கு திணைக்களமும் இந்த ஹோட்டலுக்கு முதலீடு செய்துள்ளது.

இவ்வாறிருக்கையில் நிதிக்குற்றவியல் விசாரணை பிரிவு தனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றது என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நந்தன லொக்கு விதான என்ற பெயரில் தான் நான் அந்த ஹோட்டலில் பங்குதாரராக இருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன, பொதுத்தேர்தலுக்கு முன்னர், இவ்வாறான பிரச்சாரங்கள் எதிரணியினரால் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பெயரிடப்படாத கடிதமொன்றின் மூலம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்துவது சாதாரணமற்ற ஒரு நிலைமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளதாக தம்மீது வழக்குத் தொடரும் நோக்கில் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு குறித்த குற்றச்சாட்டுக்கள் வேறு வழியிலான போலிப் பிரச்சாரம் எனவும், இவ்வாறான செயற்பாட்டின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE