பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது ஆதரவளார்களின் பிரச்சாரக் கூட்டம். யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதில் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சரத்பொன்சேகா துமிந்த திஸநாயக்க விஜயகலா மகேஸ்வரன் ராஜித சேனாரத்தின றிசாட் பதியுதின் மற்றும் பல ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் பெருமளவான மக்களும் வருகை தந்து தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இங்கு மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தையும் நான் செய்துகொள்ளவில்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
, அரசாங்கத்தினால் எனக்கெதிராக சேறுபூசும் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. நான்; யாருடனும் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொள்ளவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டவர்களே என்னுடன் இணைந்துகொண்டனர். விசேடமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் எவ்விதமான ஒப்பந்தங்களையும் நான் செய்துகொள்ளவில்லை என்றா