நிராகரிக்கப்பட்ட மாத்தறை பிரதேச சபையின் கோரிக்கை

58

 

மாத்தறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகத்திற்கு, ஐந்து ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளை அனுப்புமாறு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.

மாத்தறை பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவிருந்தன.

இந்த நன்கொடைகளை வழங்குவதற்காக ஐந்து அதிகாரிகளை அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு இலங்கை விவகார அலுவலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கையளிக்கும் நிகழ்வு
வெளிநாட்டு இலங்கை விவகார அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் அதிகாரி மற்றும் ஒரு சாரதி ஆகியோரே இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர்.

அத்துடன் அதிகாரிகளின் உணவு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களுக்கு முன்பணத்தை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மாத்தறை பிரதேச செயலகத்தால் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், வெளிநாடுகளில் உள்ள நலன் விரும்பிகள் வழங்கிய பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்விற்கு ஐந்து அதிகாரிகளையும் அரச செலவில் அனுப்புமாறு விடுத்த கோரிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு ஏற்புடையதாக இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், முடிந்தவரை செலவுகள் குறைக்கப்பட்டு நிகழ்வு நடத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி செயலகம், மாத்தறை பிரதேச செயலகத்துக்கு பதில் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

SHARE