நிரூபித்தால், கத்தியை எடுத்து எனது கழுத்தை அறுத்துக் கொள்வேன்.

118

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ ஹொரனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது :

எமது உறுதி மொழி, பத்திரத்தில் உள்ளது. எதிர்காலத்திற்கு நாங்கள் வழங்கியுள்ள உறுதி மொழிகளை நாமே நிறைவேற்றுவோம்.

அதற்கான நிதி எம்மிடம் உள்ளது. அதனை தேடிக்கொள்ளும் வழியும் எமக்கு தெரியும்.

அவ்வாறு முடியாவிட்டால் எனது வங்கி கணக்கில், வெட்கம் இல்லாத மனிதர்கள் கூறும்  18 பில்லியனை தேடி கொடுத்தாலும் முடியும். .

எனக்கு ஒரு டொலர் இருப்பதாக நிரூபித்தால் எனது கழுத்தை அறுத்துக் கொள்வேன்.

SHARE