நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே TNA யின் நிலைப்பாடு – சுமந்திரன்

434

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டு;ம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடு என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது அதனை வலுவிழக்கச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க எதிர்க்கட்சிகள் எடுத்து வரும் முயற்சிக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவான நோக்கமொன்றுக்காக அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

pol-cartoon4
TPN NEWS

SHARE