
நிலாவிலிருந்து விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் எடுத்த வந்த பை 11 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆன்ஸ்ட்ராங் அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி முதன் முறையாக நிலாவில் இறங்கினார்.
ஆம்ஸ்ட்ராங்குடன், விண்வெளி வீரரான புஜ் அல்ட்ரினும் நிலாவுக்கு உடன் சென்றார்.
அங்கிருந்து இருவரும் ஒரு சில தடயங்கள், மண் போன்றவற்றை ஒரு பையில் சேகரித்து எடுத்து வந்தார்கள்.
இது மனித குலத்தின் அரிதான சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த பையும் அதனுடன் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அல்ட்ரின் இருவரும் இணைந்து கையொப்பமிட்ட புகைப்படங்களும் நியூயோர்கில் உள்ள சோத்பீ என்ற இடத்தில் ஏலத்தில் விடப்பட்டது.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பை ஏலத்தில் 11 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.