நீங்கள் அழகாக இருக்க வேண்டுமா? கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்

195
அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் போது இந்த அழகான விடயம் நம்மிடம் எளிதில் வந்துவிடுகிறது.கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்:-

1. நீங்கள் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவற்றை மாற்றிக் கொள்ளுங்கள். இவை உங்களை அழகாக காட்டும்.

2. பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் அன்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இந்த அன்பான பழக்கவழக்கம் உங்கள் முகத்தை அழகாக காட்டும்.

3. வாய்விட்டு சிரியுங்கள். இதன் மூலம் உங்களை சுற்றி வசீகர அலை பரவும். உங்களின் சிரித்த முகம் பலரையும் சுண்டி இழுக்கும். இதனால் நீங்கள் மற்றவர்களுக்கு அழகாக தெரிவீர்கள்.

4. உடலில் கவனத்தை செலுத்துங்கள். உடலை கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உற்சாகமாக இருக்கமுடியும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை பலருக்கும் பிடிக்கும்.

5. திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களது திறமை உங்களை தனித்து காட்டும். முகம் அழகானவர்களை விட திறமையால் அழகாக தெரியும் பலரையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

6. பிறரை குறை கூறும் பழக்கத்தை விட்டு விடுங்கள். சிறிய விடயங்களையும் பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். பாராட்டி பேசும் உள்ளத்தை பலருக்கும் பிடிக்கும்.

7. உன்னால் முடியும் என்று நம்பிக்கை ஊட்டும் சொற்களை மற்றவர்களுக்கு கூறுங்கள். அதே சமயம் உன்னால் முடியாது என்று கூறுபவர்களை கண்டு கொள்ளாதீர்கள். நம்பிக்கை எண்ணமே உங்களை தனித்தன்மையுடன் காட்டும்.

8. உங்களுக்கு உங்களையே பிடிக்காமல் இருக்கலாம். முதலில் அதை விட்டுவிடுங்கள். நிறம், உயரம் ஆகியவற்றை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு உங்களை நீங்களே நேசியுங்கள். இது உங்களை அழகாக காட்டும்.

9. உங்களுக்குள்ளே ஒரு குரல் இது முடியாது என்று அவநம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களை முடங்கிப் போகச் செய்யும். அதனால் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

10. உங்களை அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். நடை, உடை போன்றவற்றில் கவனமாக இருத்தல், பாதங்களை சீராக வைத்துக் கொள்ளுதல், நறுமணம் வீசும் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துக் கொள்ளுங்கள்.

SHARE