நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்: டோனி உருக்கம்

151
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவரது இதயங்களிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு விளையாட்டு உலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் அப்துல்கலாம் குறித்த நினைவுகளுடன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

டோனி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கலாம் எளிமையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பின் மூலம் நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட பல சிகரங்களை தொட்டார்.

மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அவர் வழங்கிய ஆலோசனைகளை என்றும் பின்பற்றுவோம். அவர் இளைஞர்கள் பின்பற்றத்தக்க மிகச் சிறந்த ரோல்–மொடலாக திகழ்ந்தார்.

நீங்கள் எப்போதும் எங்களது இதயங்களில் வாழ்த்து கொண்டு இருப்பீர்கள். உங்களது ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE