நீங்கள் கண்காணிக்கப்படலாம்: ரகசிய கமெராவின் ரகசியங்கள்

341
தொழில்நுட்பம் என்பது இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை போன்றது.எந்த அளவுக்கு அதனால் நன்மைகள் ஏற்படுகின்றதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் தீமைகளும் ஏற்படக்கூடும்.

அதற்கு சிறந்த உதாரணமாக கமெராவை சொல்லலாம். உங்கள் கைப்பேசியில் நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை எங்கேயோ இருப்பவரால் பார்க்கமுடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ரகசிய கமெராக்கள் மூலம் உங்களின் அனுமதியில்லாமலேயே உங்களின் ரகசியங்களை திருடலாம்.

ஒரு காலத்தில் ராணுவ ரகசியங்கள் மற்றும் மற்ற நாடுகளை பற்றி தெரிந்துகொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட ரகசிய கமெராக்கள் இன்று தனி நபர்களை கண்காணிப்பதற்காகவே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் சந்தைகளில் இத்தகைய கமெராக்களை சர்வ சாதாரணமாக வாங்க முடியும் என்பதும் இதன் புழக்கம் அதிகமாகிப்போனதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது.

குறிப்பாக வெளியூர் செல்பவர்கள் தங்குவதற்கு ஹொட்டல்களை தெரிவு செய்யும்போது கவனமாக இருத்தல் நலம். எனெனில் குளியலறை, படுக்கையறை என்று எங்கு வேண்டுமானாலும் இருக்கும் ரகசிய கமெராக்கள் உங்களை கண்காணிக்கக்கூடும்.

எனவே ஹொட்டல்களில் தங்க நேர்ந்தால் முதலில் வெளிச்சம் ஏற்படாமல் அறையை இருட்டாக்குங்கள் . பின்னர் உங்களின் கைப்பேசி மூலம் அறையில் உள்ள அனைத்துப்பகுதியையும் புகைப்படம் அல்லது வீடியோ எடுங்கள்.

எங்கேயாவது சிகப்பு புள்ளி போன்று ஒளி தெரிந்தால், இது ரகசிய கமெராவாக இருக்கலாம்.

அடுத்ததாக உங்கள் கைப்பேசியில் யாரிடமாவது பேசியப்படி மெதுவாக அறை முழுவதும் நடந்துச்செல்லுங்கள்.திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அப்பகுதியில் ரகசிய கமெராக்கள் இருப்பதற்காக வாய்ப்புகள் உண்டு.

மேலும் வீட்டில் இருப்பது போன்று இல்லாமல் முடிந்தவரை ஹொட்டல்களில் தங்கும் போது கண்ணியமாக ஆடைகளையே பயன்படுத்துங்கள்.

மேலும் இன்று சந்தைகளில் ரகசிய கமெராவை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு வகையான சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே உங்கள் பயணத்தின் போது அதனை பயன்படுத்துங்கள். எனினும் கவனம் தேவை, அந்த கருவியும் உங்களை உளவு பார்க்கலாம்.

SHARE