நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் போலியானதாக கூட இருக்கலாம்! உடனே செக் பண்ணிடுங்க

362

 

போலியான வாஸ்ட்அப் செயலி இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் செயலி போலவே இருக்கும் குளோன் செய்யப்பட்ட, 3ஆம் தரப்பின் போலி வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

GB WhatsApp என்ற பெயரில் இருக்கும் இந்த வாட்ஸ்அப் பல தவறுகளைச் செய்து வருவதாகச் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET தெரிவித்துள்ளது. இதுபோன்ற போலி மற்றும் பாதுகாப்பற்ற செயலிகள் மூலம் நீங்கள் பேசுவதை உங்களின் போனில் இருந்து ரெக்கார்டு செய்ய முடியும், இதேபோல் வீடியோவும் ரெக்கார்டு செய்ய முடியும்.

இச்செயலி ப்ளே ஸ்டோரில் இல்லை, ஆனால் இணையத்தில் பல வழிகளில் இருந்து ஊடுருவி வருகிறது.

முதலில் உங்கள் போனில் இருப்பது சரியான வாஸ்ட்அப் செயலி தானா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம ஆகிறது.

SHARE