நீடிக்கிறது தடை.. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ பதில்

169
சூதாட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் மீதான தடை நீடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் ஆகியோர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில் போதுமான ஆதரமில்லை என்று கூறி டெல்லி நீதிமன்றம் அவர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தாலும் அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் பிசிசிஐ-யிடம் இருப்பதால் அவர்கள் மீதான தடை தொடருகிறது.

தற்போதைய நிலையில் அவர்கள் சாதாரண கிளப் போட்டிகளில் கூட பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் முடிவில் பிசிசிஐ தலைவர் இருக்கிறார்.

ஜெய்பூர் மற்றும் அகமதபாத் நகர காவல்துறையினர் உதவியையும் பிசிசிஐ நாடியுள்ளது. அவர்களிடம் புதிய ஆதாரங்களை திரட்ட பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

SHARE