அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை திருமணம் செய்துகொண்டார்.
பேட் கம்மின்ஸ் – பெக்கி பாஸ்டன் ஜோடி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம், கடந்த 2020ஆம் ஆண்டு நடந்தது. ஆனால், கோவிட் – 19 தொற்று காரணமாக இவர்களது திருமணம் தடைபட்டது.
எனினும் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு ஆல்பி என்ற ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சூலை 29ஆம் திகதி பேட் கம்மின்ஸ் – பெக்கி பாஸ்டன் ஜோடிக்கு Chateau Du Soleil-யில் பிரம்மாண்டமான முறையில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலை நடந்தது.இருவரும் தங்கள் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். கிரிக்கெட் உலகில் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பிரித்தானியாவைச் சேர்ந்த பெக்கி பாஸ்டன், உள்கட்டமைப்பு வடிவமைப்பாளராக உள்ளார். மேலும் ஆடம்பரமான வீட்டு அலங்காரங்களை விற்கும் ஒன்லைன் ஸ்டோரை நடத்தி வருகிறார்.
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் 29 வயதாகும் பேட் கம்மின்ஸ், 43 டெஸ்ட் போட்டிகளில் 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.