நீண்ட இடைவேளைக்கு பிறகு மோதல்-வெல்வது அஜித்தா? விஜய்யா?

358

தமிழ் சினிமாவில் எப்போதும் விஜய், அஜித் இருவருக்கும் தான் முதல் இடத்திற்கான போட்டி மாறி மாறி நடந்து வருகின்றது. இந்நிலையில் இம்முறை நீண்ட நாட்களுக்கு பிறகு ப்லிம் பேர் விருது விழாவில் சிறந்த நடிகர் பிரிவில் இருவரும் போட்டியிடுகின்றனர்.

அஜித் வீரம் படத்திற்கும், விஜய் கத்தி படத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் நடிகர் விஜய் கத்தி படத்திற்கு தான் விருதை வெல்வார் என கூறப்படுகின்றது.

அஜித் இதற்கு முன் வில்லன், வாலி, வரலாறு படத்திற்காக இவ்விருதை வெல்ல, இந்த முறையும் ’வ’வரிசையில் வீரம் பெயர் இருப்பதால் செண்டிமெண்டாக அஜித் வெல்வார் என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

ஆனால், சத்தமே இல்லாமல் காவியத்தலைவன் படத்திற்காக சித்தார்த், வேலையில்லா பட்டதாரி படத்திற்காக தனுஷ் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

SHARE