நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முக்கிய அப்டேடை வழங்கிய Whatsapp செயலி

24

 

வாட்ஸப்பில் தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளின் இலக்கங்களை திறந்து பார்க்காமலே Block செய்யலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப்
உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர்.

இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.

வாட்ஸ்அப் கடந்த காலங்களில் இருந்து ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட்
தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்களை தவரிக்கும் விதமாக ஏற்கனவே வாட்ஸப்பில் Block செய்யும் அம்சம் இருந்தது.

அது இருந்த போது, ஒருவர் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால் திறந்து பார்த்துவிட்டுதான் Block செய்யமுடியும். செய்தி அனுப்பியவருக்கு நீங்கள் செய்தியை பார்த்து விட்டீர்கள் என இதனால் தெரியவரும்.

சில மோசடி செய்பவர்கள் செய்தியை திறந்து பார்த்தாலே தகவல்களைத் திருடும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வாட்ஸப்பில் Block செய்யும் வசதியானது மேலும் மேம்பட்டு இருந்தால் நல்லது என பலரும் நினைத்துள்ளார்கள்.

அந்தவகையில் இனி தெரியாத எண்களில் இருந்து வரும் செய்தியை அல்லது விளம்பரங்களை நீங்கள் திறந்து பார்க்காமலே Block செய்ய முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அப்டேட் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் உடனே உங்கள் வாட்ஸப்பை அப்டேட் செய்துக்கொள்ளுங்கள்.

SHARE